உடல் அழகில் சோடா மாவின் நன்மைகள்

சமையல் தாண்டி பல நன்மைகள் சோடாமாவுக்கு உள்ளது. 

  • உங்களுக்கு தெரியாத சோடா மாவின் நன்மைகள்
  • அதிக ஆன்டி-செப்டிக் நன்மைகள் உண்டு
  • சோடா மாவில் பை கார்பனேட் இருப்பதால் சமையலுக்கு உதவும்

நமது அனைவரின் வீட்டின் சமையல் அறையிலும் சோடா மாவு (Baking Soda) நிச்சியம் இருக்கும். எப்போவாவது சமையலுக்கு பயன்படுத்துவதோடு சரி, அதன் பிறகு பயனில்லாமல் ஒரு மூலையில் இருக்கும். ஆனால் சமையல் தாண்டி பல நன்மைகள் சோடாமாவுக்கு உள்ளது.

சோடா மாவின் நன்மைகள்

1.இயக்கையான ஆன்டி-ஆசிட் 

சில சமயங்களில் நம் வயிற்றில் இருக்கும் அமிலம் அதிகரித்து குடல் மற்றும் தொண்டையில் அதிகரித்து எரிச்சலை அதிகரிக்கும். சோடா மாவில் ஆன்டி ஆசிட் குணங்கள் உள்ளதால் அது அமிலத்தை அதிகரிக்க விடாமல் சீர் செய்யும்

 
2. இயற்கையான ஆல்கலைசிங் குணம் கொண்டது 

இதில் இருக்கும் நச்சற்ற தன்மை உடலின் அமில மற்றும் வீக்கத்தின் விளைவு குறைக்க உதவும். உடலின் Ph அளவை சரியான நிலையில் வைத்திருக்கும். உடலில் உள்ள அதிக அமிலம் ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம், மற்றும் பல ஆபத்தை ஏற்படுத்தும்

3. சிறுநீர்ப்பை தொற்று நோயைத் தணிக்க உதவுகிறது

சோடாமாவு மற்றும் தண்ணீர் கலவை சிறுநீர்ப்பை தொற்று நோயைத் தணிக்க உதவும்; உடலில் இருக்கும் அமிலத்தின் அளவை குறைத்து நோயை தடுக்க உதவுகிறது

4. உடல் பயிற்சி திறனை அதிகரிக்கும் 

அதிக  உடல்பயிற்சி செய்யும் பொழுது வெளியேறும் லாக்டிக் அமிலம் தசைகளிலும் எலும்புகளில் சேர்ந்து விறைப்பு மற்றும் தசை சோர்வை ஏற்படுத்தும். சோடாமாவை சிறிய அளவில் தண்ணீரில் கலந்தது குடித்தால் இந்த சிக்கல் தீரும்

5. கீல்வாதம் மற்றும் பிற எலும்பு பிரச்சினைகளை தீர்க்கும் 

சிறுநீர் மற்றும் சிறுநீரில் உள்ள யூரிக் அமிலத்தின் அதிக அளவு உடலில் உள்ள திசுக்களில் வலி, மூட்டுவலி மற்றும் கீல்வாதம் போன்ற நீண்டகால நோய்களை ஏற்படுத்தும். சோடா மாவு இதை சீர் செய்து அமிலத்தின் அளவி குறைக்கும்.

அழகு குறிப்பில் சோடா மாவின் நண்மைகள் 

1.சிறந்த எக்ஸ்ஃபாயிலெட்டர் 

சோடா மாவு முகத்தில் இருக்கும் செத்த அணுக்களை வெளியேற்றும், இது சர்மத்தை அதிக மின்ன செய்யும். தண்ணீருடன் சோடா மாவை சேர்த்து முகத்தில் தேய்க்கவும். தினமும் இல்லாமல், வாரம் இரண்டு முறை பயன் படுத்தவும்.

2. முகப்பருவை தடுக்கும் 

தோலின் வீக்கத்தை குறைத்து முகப்பரு வராமல் தவிர்க்கும். ஆன்டி பேக்ட்டரிய இருப்பதால் சருமம் சேதமடையாமல் காக்கும்.

3. வெள்ளை பற்களுக்கு உதவும் 
உப்பு எலுமிச்சை போல சோடா மாவும் முத்துப் போன்ற வெள்ளை பற்களை கொடுக்கும். அல்கலைன் உள்ளதால் பற்களின் நிறம் மாறாமல் பாதுகாக்கும்
உங்கள் வீட்டில் இருக்கும் இந்த நலன்கள் கொண்ட சோடா மாவை உங்கள் சருமத்தில் பயன்படுத்தி பொலிவடைய செய்யுங்கள்.