முகப்பருக்களை நீக்குவது முதல் முகப் பொலிவு வரை சந்தனத்தின் 5 நன்மைகள்

ஆயுர்வேதத்தில் சிறப்புவாய்ந்த, உடலுக்கு அழகு சேர்க்கும் பல நன்மைகளைக் கொண்டது சந்தனம்

  • பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகள் பொதுவானவை
  • ஆயுர்வேதத்தில் சிறப்புவாய்ந்தது சந்தனம்
  • சந்தனம் அதிகமான மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது

மாசு நிறைந்த நகர வாழ்க்கையில் பருக்கள், கரும்புள்ளிகள், கருவலையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் சாதாரணமாக அனைவருக்கும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த பிரிச்சனைகளை போக்குவதற்கு 8 முதல் 9 மணி நேர தூக்கம், அதிகமாக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். எப்படியிருந்தாலும் சில நேரங்களில் இந்த முயற்சிகள் போதாமல் ஆகிவிடுகிறது. அப்போது சில மாற்று தீர்வுகள் தேவைப்படுகின்றன.

ஒரு எளிய மற்றும் இயல்பான தீர்வு உங்களின் அனைத்து அழகு சார்ந்த துயரங்களையும் நீக்கிவிட உதவும் என்று நாங்கள் கூறினால் நம்புவீர்களா? ஆயுர்வேதத்தில் சிறப்புவாய்ந்த, உடலுக்கு அழகு சேர்க்கும் பல நன்மைகளைக் கொண்ட சந்தனம் தான் அது. சந்தனம் இயற்கையானது, நம்பகமானது, பயன்த்தரக் கூடியது.

நறுமணம் நிறைந்த சந்தன மரத்திலிருந்து பெறப்பட்ட பழுப்பு நிறப் பவுடராக இந்த சந்தனம் கிடைக்கும். சந்தன எண்ணெய் பல விதமான தோல் பிரச்சனைகளுக்கு தீர்வழிப்பதில் சிறந்து விளங்குகிறது. சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. எனவே பல சரும பிரச்சன்னைகள் தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.

இதோ உங்கள் சருமத்திற்கு பயன்தரும் சந்தனத்தின் பயன்கள்

1. கருமையை நீக்க உதவுகிறது

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். சந்தனத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சூரியனால் ஏற்படும் கருமையை அகற்ற உதவுகின்றன.

 

2. அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

அதன் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு அல்லது சூரியனின் கதிர்கள் காரணமாக ஏற்படும் எரியும் உணர்வைப் போக்க உதவுகிறது. சந்தன எண்ணெய் பூச்சிக் கடி அல்லது வேறு எந்த தோல் காயங்களுக்கும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம்.

3. சுருக்கத்தை போக்க பயன்படுகிறது

சந்தனம் சருமத்தில் புரதங்களைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் உங்கள் தோலை அனைத்து வகை ஒரு பிரேக்அவுட், ஒவ்வாமை அல்லது சிராய்ப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது தோல் மென்மையான திசுக்களில் உள்ள சிறிய சுருக்கங்கள் மற்றும் துளைகளை இறுக்குகிறது. பலவிதமான ஃபேஸ் பக்ஸ், டோனர்களில், சந்தனம் முக்கிய பொருட்கள் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன.

 

 4. கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது

சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மேலும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தில் பாதிப்படைந்த பகுதியில் சந்தனத்தை பாலுடன் கலந்து அந்த கலவையை பயன்படுத்தினால் அது தோலை பாதுகாக்க உதவும்.

 

வீட்டில் தயாரிக்க கூடிய சந்தனப் ஃபேஸ் கிரீம்கள்

 

1. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க

 

சந்தன எண்ணெய் ஒரு தேக்கரண்டி , மஞ்சள் மற்றும் கற்பூரம் ஒரு சிட்டிகை கலந்து. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க இரவு முழுவதும் ஃபேஸ்பேக் போடுங்கள். நீங்கள் அத்துடன் 1 தேக்கரண்டி சந்தன பவுடர், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில எலுமிச்சை சாறுகளை ஒரு பசையாக தயாரித்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பின்னர், உலர்ந்த பின்பு இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள்.

2. தோலை மென்மையாக்க

சந்தன எண்ணெயை உங்கள் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.

3. சூரியானால் ஏற்படும் கருமையை போக்குகிறது

ஃபேஸ் பேக் தயார் செய்ய ஒரு தேக்கரண்டி வெள்ளரிச் சாறு, ஒரு தேக்கரண்டி தயிர், தேன் ஒரு தேக்கரண்டி, சில எலுமிச்சை சாறு மற்றும் சந்தன பவுடர் ஒரு தேக்கரண்டி பயன்படுத்துங்கள். இந்த கலவையாலான ஃபேஸ் பாக்கை உங்கள் முகத்தில் தடவவும், சுமார் 15 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். இது சூரியனால் ஏற்பட்ட கருமை மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.

 

4. கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது

1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி மசாஜ் செய்து அதை இரவு முழுவதும் விட்டு விடுங்கள். தொடர்ந்து இதைப் பயன்பாடுத்துவதால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.

5. எண்ணெய் படிந்த சருமத்துக்கு

சந்தன தூளை ரோஜா நீர் சில துளிகள் சேர்த்து கலந்து உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.