அசத்தலான சில குறிப்புகள் உங்கள் சருமம் உடனடி பொலிவு பெற

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத பளபளப்பான சருமம் பெற வேண்டும் என்பது தான் அனைவரது குறிக்கோள். இது நம்மை அழகாக காட்டுவதோடு நமக்கு புத்துணர்ச்சியையும், மன தைரியத்தையும் அளிக்கும்.

 

தூசி, சுற்று சூழல் மாசுபாடு, மன அழுத்தம், மோசமான சரும பராமரிப்பு ஆகியவை காரணமாக நம் சருமத்தின் அழகானது பாதிக்கப்படுகிறது. கவலை வேண்டாம்…. சருமத்தில் உடனடி பளபளப்பு பெற உதவும் ஒரு சில குறிப்புகளை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

◆நாள் முழுவதும் பல வகையான மாசு மற்றும் தூசி நம் சருமத்தை பாதிக்கும். மேலும் நாம் எடுத்து கொள்ளும் ஜன்க் உணவு, ஒழுங்கற்ற சரும பராமரிப்பு சுழற்சி, மன அழுத்தம் ஆகியவை காரணமாக நம் சருமமானது சோர்வாக பொலிவிழந்து காணப்படும். எனவே உங்கள் சருமத்தை சுத்தம் செய்வது என்பது மிக மிக அவசியமான ஒன்று. சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைப்பதன் மூலம் சருமம் பொலிவாக மாறும்.

◆ஈரப்பதம் நிறைந்த சருமமே எப்போதும் பொலிவாக இருக்கும். சோர்வான சருமத்திற்கு காரணம் போதிய நீர்ச்சத்து கிடைக்காதது தான். நாள் முழுவதும் அதிக அளவில் தண்ணீர் குடித்து வாருங்கள். உங்கள் நீர் எடுத்து கொள்ளும் அளவை அதிகரித்தாலே உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் காண இயலும்.

◆நல்ல ஆழ்ந்த உறக்கம் உடலுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் எந்த அளவு முக்கியமோ அதே அளவு சரும ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. இரவு நேரத்தில் தான் சருமத்தில் உள்ள இறந்த அணுக்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் புதுப்பிக்கும். இது உங்கள் சருமத்தை ஃபிரஷாக வைத்து பொலிவாக மாற்றும். போதிய அளவு தூக்கம் இல்லாத போது சருமம் பொலிவிழந்து காணப்படும்.

◆நாம் உண்ணும் உணவு நம் சருமத்தின் அழகில் அதிக பங்கினை வகிக்கிறது. வைட்டமின், புரதம் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவை எடுத்து கொள்ளும் போது நம் சருமம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எண்ணெய் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், ஜன்க் உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனோடு அதிக அளவில் தண்ணீர் பருகி வர வேண்டும்.

◆முகத்தில் உள்ள சோர்வினை போக்க ஐஸ் கட்டிகளை முகத்தில் வைத்து வாருங்கள். இது கண்களை சுற்றி உள்ள கருவளையங்கள் மற்றும் சோர்வினை போக்குகிறது. கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு ஐஸ் கட்டிகளை தேய்த்து வந்தால் உடனடி பொலிவை பெறலாம்.

◆உங்கள் சருமத்தை பொலிவாக மாற்ற வீட்டு வைத்தியங்களை விட சிறந்த வழி வேறொன்றும் இல்லை. தேன், கற்றாழை மற்றும் பப்பாளி உங்கள் சருமத்திற்கு உடனடி பொலிவினை தரக்கூடியவை. இது மூன்றையும் ஒன்றாகவும் பயன்படுத்தி வரலாம்.