அவகாடோ ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

அவகாடோ – 2
ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்
கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும்.

வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.