உங்க முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாக போக்க தினமும் செய்யுங்க

பார்ப்பதற்கு 40 வயதுடையவரை போன்று இருப்பார், அனால், அவருக்கு வெறும் 20 வயதே ஆகும். இளம் வயதிலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை தரும் இந்த பிரச்சினை உங்களுக்கு இருந்தால், மிக எளிமையாக இதனை சரி செய்து விடலாம்.

குறிப்பாக இயற்கை வைத்திய முறைகளை வைத்தே இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம். இயற்கை முறையை பின்பற்றுவதால் எந்த வித பக்க விளைவுகளும் இருக்காதாம். எப்படி இயற்கை முறையை வைத்து முக சுருக்கங்களை போக்குவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

முக சுருக்கங்கள் ஏன்..?

முகத்தில் மிக இளம் வயதிலே சுருக்கங்கள் வந்துள்ளதா..? இதற்கு என்ன காரணமாக இருக்கும் என யோசிக்கிறீர்களா..? நாம் உண்ணும் உணவின் தரமும், பயன்படுத்தும் வேதி பொருட்களின் வீரியமும், ஆரோக்கியமற்ற சுற்றுசூழல் தான் இதற்கு முதன்மை காரணியாக உள்ளது. இந்த நிலை நீண்டு கொண்டே போனால், விளைவு அதிகரிக்க கூடும்.

ஆலிவ் எண்ணெய்

வைட்டமின் ஈ நிறைந்துள்ள இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். உணவில் இந்த எண்ணெய்யை சேர்த்து கொண்டு சாப்பிட்டாலும், அல்லது முகத்தில் பூசி மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த லோஷனாக உங்களுக்கு வேலை செய்யும்.

ரோஸ்மெரி எண்ணெய்

நாம் அறிந்த எண்ணெய் வகைகள் மிக குறைவானவை. ஆனால், நமக்கு தெரியாத எண்ணெய் வகைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான். இந்த ரோஸ்மெரி எண்ணெய். இது ஒருவகையான பூவகை செடியாகும். இந்த செடியில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவையாகும். இதனை இவ்வாறு பயன்படுத்தினால் பலன் அதிகம்.

 

எவ்வாறு பயன்படுத்துவது..?

பாதி வெள்ளரிக்காயை தோல் உறித்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் ரோஸ்மெரி எண்ணெய்யை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து வெட்டு வெதுப்பான நீரில் முகாத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சுருக்கங்கள் விரைவில் மறைந்து போகும்.

ஆர்கன் எண்ணெய்
பல வகையான மருத்துவ தன்மையை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் ஒரு அற்புத எண்ணெய் இந்த ஆர்கன் எண்ணெய். இதில் பல வகையான நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்யை உடல் முழுக்க பூசி மசாஜ் செய்தால் தோலின் சுருக்கங்கள் எளிதில் மறைந்து விடும்.

முட்டை வைத்தியம்
முகத்தில் உள்ள சுருக்கங்களை எளிதில் போக்குவதற்கு இந்த முட்டை வைத்தியம் போதும். அதிகமான நன்மைகளை இந்த குறிப்பு தரும்.

தேவையானவை :-

முட்டை 1

தேன் 2 ஸ்பூன்

செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதனை நன்கு அடித்து கொண்டு தேனை கலந்து கொள்ளவும். இந்த முட்டை மாஸ்க்கை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் அருமையான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக முக சுருக்கங்கள் அனைத்தையும் இது போக்கி விடுமாம்.

அவகேடோ எண்ணெய்
அவடக்காதோ பழத்தின் பெருமை நம் அனைவருக்கும் தெரியும். அதே போன்று, அவகேடோ எண்ணெய்யின் பலனும் அதிகமானது. முகத்தில் எண்ணெய்யை தடவி நல்ல மசாஜ் கொடுத்தால், எல்லா விதமான பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து விடும். முக சுருக்கம், மங்கிய தன்மை, ஆரோக்கியமற்ற சருமம் ஆகிய பிரச்சினைகளை இது தீர்த்து வைக்கும்.