எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி

மாலைநேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் காரா சேவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம், வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கடலை மாவு – 200 கிராம்,
பச்சரிசி மாவு – 50 கிராம்,
மிளகுத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
ஓமம் – சிறிதளவு,
எண்ணெய் – கால் கிலோ,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும்.