கண்டிப்பாக வியப்பீர்கள் உதடு சிவப்பா மாறணுமா உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள்

பொதுவாகவே தங்களது முகம் வெள்ளையாக இருக்கிறதோ இல்லையோ உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சரி ஆண்களும் சரி விரும்புவது வழக்கம் தான். ஆனால், உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் நாம் எந்த ஒரு கிரீம்களையோ, செயற்கையான மருந்துகளை உபயோகிக்க தேவையில்லை. வீட்டிலுள்ள சீனி மட்டும் போதும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • சீனி தேவையான அளவு
  • ஒரு டீஸ்பூன் தேன்
  • சிறிதளவு எலுமிச்சை சாறு

செய்முறை

ஒரு சின்ன பவுலில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு கிளறி அதனுடன் சீனியை போட்டு சற்று நேரம் கிளற வேண்டும்.

சீனி மணல் போல இருக்கும் பொழுது அதை உதட்டில் எடுத்து முழுவதும் பூச வேண்டும். பூசி பின்பு ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்து கீழாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பின் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என்று மாற்றி மாற்றி ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் மசாஜ் செய்தால் போதும். அதன் பின்பு உதட்டை கழுவி விட வேண்டும். இதே போல ஒரு தொடர்ந்து ஒருவாரத்திற்கு செய்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு நீங்கள் விரும்பும் சிவப்பு நிற உதட்டிற்கும் அதிகமான அழகிய நிறத்தில் மாறும்.