கொக்கோ தேங்காய் பர்ஃபி எப்படிச் செய்வது

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 1 கப்
கொக்கோ – 1 கப்
பால் – 1 கப்
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்
நெய் – 4-5 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொக்கோ மற்றும் 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் வதக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்த, பால் ஊற்றி குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் ஏலக்காய் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கிளற வேண்டும். அதற்குள் ஒரு தட்டில் நெய் தடவிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் கலவையை தட்டில் பரப்பி, பின் கத்தி கொண்டு சதுரங்களாக வெட்டி, குளிர வைத்தால், கொக்கோ தேங்காய் பர்ஃபி தயார்!!!