சமைக்கலாம் வாங்க கடாய் பனீர் எப்படி செய்வது

தேவையான பொருட்கள் :

பனீர் – 250 கிராம்,
இஞ்சிபூண்டு விழுது – 2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,

பச்சை மிளகாய் – 3,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
காய்ந்த வெந்தயக் கீரை – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா 2,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

2) இத்துடன் இஞ்சி – பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

3) பின்னர் நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து கிளறவும். காய்ந்த வெந்தயக் கீரையை கையில் பொடித்து சேர்க்கவும்.

4) கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கடாய் பனீர் ரெடி.