சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்முறை

தேவையானவை:

சிவப்பு அரிசி – ஒரு கப்,

பாசிப்பருப்பு – கால் கப்,

துருவிய வெல்லம் – இரண்டரை கப்,

தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,

நெய் – 2 டேபிள்ஸ்பூன்,

முந்திரி, திராட்சை – சிறிதளவு,

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேகவிடவும் (தண்ணீர் அளவு: ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு). வெந்ததும் இறக்கி நன்கு மசித்து, அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்… நெய் ஊற்றி கலந்து இறக்கவும்.