சூப்பரான கத்தரி வெந்தயக்கறி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ,
கடலை பருப்பு – 2 ஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்,
கா.மிளகாய் – 6,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
இஞ்சி பேஸ்ட் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 3 கரண்டி,
மஞ்சள் – 1 ஸ்பூன்,
புளி – சிறிதளவு,
தனியா – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

கத்தரிக்காயை நாலாக வெட்டிக் ெகாள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கத்தரிக்காயை சேர்த்து மூடி போட்டு இருபக்கம் நன்றாக வேகவிடவும். மற்றொரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம், பெருங்காயம், புளி, உப்பு நன்றாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

இந்த பொடியை வேக வைத்த கத்தரிக்காயில் கலந்து 15 நிமிடம் ஆன பிறகு இறக்கவும். இந்தக்கறி சாதத்துக்கு, சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.