சூப்பரான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி

ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள் மூன்றையும் தண்ணீர் விட்டு கலந்து, வெட்டி வைத்துள்ள முட்டையை அதில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின், அதில், குடைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளறியபின், பொரித்த முட்டையை சேர்த்து தேவையெனில் உப்பு சேர்த்து கடைசியாக மிளகு தூள் மற்றும் வெங்காயத் தாளை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.