சூப்பர் டிப்ஸ் கருகருவென இருக்கும் உதடுகளின் நிறத்தை ரோஸ் நிறமாக்க

பொதுவாக இன்றுள்ள பல நபர்கள் பல விதமான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறோம். இதன் காரணமாக நமது முகம் அழகாக பராமரிப்பது அவரவர் பணிகளை பொருத்தும்., பணியை முடித்த நேரத்தில் அழகை பராமரிக்கும் செயல்களையும் செய்வது வழக்கம்.

முகத்தின் அழகை எவ்வுளவு பராமரித்தாலும்., உதட்டின் அழகின் மீது சிலருக்கு அலாதி பிரியமானது ஏற்படும். இதன் காரணமாக உதட்டின் அழகை பராமரிப்பதில் சிலர் முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த வகையில்., எளிமையான முறையில் உதட்டின் அழகை பராமரிப்பது எப்படி என்று காண்போம்.

உதட்டின் அழகை மெருகேற்ற :

கொத்தமல்லி இலை – 5 இலைகள்.,
சீனி – கால் தே.கரண்டி.,
தேன் – கால் தே.கரண்டி…

செய்முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் எடுத்து கொண்டு உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி., சிறிதளவு சாறாக மாற்றிய பின்னர்., அந்த கலவையை உதட்டில் சேர்த்து தடவவும்.

சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்த பின்னர் உதடுகளை ஊற வைத்து கழுவினால் உதடானது ஜொலிக்கும். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து தினமும் செய்து வந்தால் உதடுகள் அழகிய ரோஸ் நிறத்தை பெரும். தேனின் மூலமாக உதடுகள் குளிர்ச்சியையும் பெரும்.