தோசை இட்லி சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் இந்த பீர்க்கங்காய் சட்னி

தேவையானப்பொருட்கள்:

பீர்க்கங்காய் (சிறியது) – 2,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, பீர்க்கங் காயை தோல் சீவி நறுக்கி வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.

வதக்கிய பீர்க்கங் காயுடன் தேங்காய்த் துருவல், உப்பு, வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, கடுகு தாளித்துக் கலந்து பரிமாறவும்.

இது… தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.