பைனாப்பிள் பூந்தி செய்முறை

தேவையானவை

கடலை மாவு – ஒரு கப்,

சர்க்கரை – ஒன்றேகால் கப்,

சமையல் சோடா – ஒரு சிட்டிகை,

பைனாப்பிள் ஜூஸ் – கால் கப்,

பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள்,

எண்ணெய் – பொரிக்க.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.