முட்டைக்கோப்பி செய்வது எப்படி

செ.தே.பொ :

சுடுநீர் – 3/4 கப்
முட்டை-1
கோப்பி – 1 தே.கரண்டி
சீனி – 2 1/2 தே.கரண்டி

செய்முறை :-
* முதலில் சுடுநீரில் சீனியையும், கோப்பியையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
* இன்னொரு கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
* இதில் கலந்து வைத்திருக்கும் கோப்பியை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து சூட்டுடன் பருகவும்.
** குறிப்பு : சுடுநீர் அதிக கொதியாக இருந்தால் முட்டை அவிந்துவிடும். ஆகவே மிதமான சூட்டிலேயே கலந்து கொள்ளவும்.