லெமன் லைம் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி

என்னென்ன தேவை?

எலுமிச்சைச்சாறு – 1/2 கப்,
தண்ணீர் – 1 கப்,
சர்க்கரை – 3/4 கப்,
புதினா சாறு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீருடன், 3/4 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இதனுடன் புதினா சாறு சேர்க்கவும். பின்பு ஆற விடவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வடிகட்டி எடுக்கவும். இதை பாப்சிகிள் மோல்டில் ஊற்றி 3-4 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.