வடுமா ஊறுகாய் செய்வது எப்படி

தேவையானவை:

வடுமாங்காய் – 15
உப்பு – 150 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
கடுகு – 1 டீஸ்பூன்
பெருஙகயத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை நான்கு பக்கமும் கீறி உப்பில் போட்டு புரட்டி இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். உப்பில் ஊறிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும்.

காரம் தேவைப்படும் அளவுக்கு மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்பு இறக்கி ஆற வைக்கவும். பிறகு பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.

ஊறுகாயை தாளிக்கும் போது சிறிது அளவு கூட தண்ணீர் படக்கூடாது.