அரிசி மாவில் காய்கறிரொட்டி செய்முறை

அரிசி மாவில் காய்கறிகளை சேர்த்து செய்யும் ரொட்டி சூப்பராக இருக்கும். ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இன்று இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய் (அனைத்தும் துருவியது) – 2 கப்

வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
அரிசி மாவு – 2 கப்
சீராகத் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிட்டிகை

வெண்ணெய் – 100 கிராம்

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் காய்கறித் துருவல், சீரகம், சீரகப் பொடி, உப்பு, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஆரஞ்சு பழ அளவுக்கு எடுத்து, தோசைக்கல்லில் வைத்து மெலிதாகத் தட்டுங்கள். சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.