இதோ அற்புதமான எளிய தீர்வு சருமம் பொலிவுடன் மின்ன வேண்டுமா அப்போ வெண்ணெயை இப்படி பயன்படுத்துங்க

வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலேடு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும்.

வெண்ணயானது விட்டமின் ஏ,இ,கே, பி12(கோபாலமைன்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது மாங்கனீசு, குரோமியம், அயோடின், துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாதுஉப்புகளைக் கொண்டுள்ளன. இதில் புரதம், கொழுப்பு ஆகியவையும் காணப்படுகின்றன.

மேலும் வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்தை பராமரிப்பதிலும் பெரிதும் உதவி புரிகின்றது.

குறிப்பாக இதனை சருமத்திற்கு உபயோகிக்கும் போது பொலிவை தருகின்றது.

அந்தவகையில் சரும பொலிவுற்கு வெண்ணெயை எப்படி உபயோகிக்கலாம் என பார்ப்போம்.

  • வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும்.
  • 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
  • 1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, பிரஸ் மூலம் முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசவேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.