இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா அப்ப தினமும் செய்யுங்க

பெண்களுக்கு பொதுவாக பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்பது ஒரு கெட்டப் பழக்கமாகவே இருக்கும். ஆனால் இதில் பலர் தனக்குத் தேவையான விசயங்களை நேரிடையாகவே இது என்ன, எப்படி எனக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரோ அவரின் அனுமதியின்றி பிறரது தனிப்பட்ட விசயங்களை தெரிந்து கொள்கின்றனர். இவ்வகைகளில் ஆண்களும் அடங்குவர்.

ரோட்டில் செல்லும் போது யாரோ ஒருவர் தன்னை கடந்து செல்லும் போது நம்மையே அறியாமல் அவரது அணிகலன்கள் மேக்கப், நகைகள் என நோட்டம் விடாமல் போவதில்லை. அப்படி பார்க்கிற விசயங்களை உடனடியாக எங்கும் கிடைக்கும் என ஆன்லைன் ஆஃப்லைன் என எல்லாத் தளங்களிலும் தேடிப் பார்த்து வாங்கிவிட்டு தான் மறுவேலையைப் பார்ப்போம்.

கண் அவ்வளவு அழகு:

பெண்களின் மிக அழகான பகுதிகளில் கண் என்பது மிக மிக அழகான பகுதியாகும். அவ்வளவு வசீகரமான பகுதியை மேலும் அலங்கரிக்க யார் தான் விரும்ப மாட்டார். பொதுவாக கருநிற மைகளைத் தான் பெண்கள் பயன்படுத்துவார்கள். முன்பு உடல்நலத்துக்காக பூசப்பட்ட கரு மைக்கள் இன்று அழகு சாதனப் பொருளாக அவதாரம் பூண்டிருக்கிறது.

நடிகைகள் என்ன மை பூசுகிறார்கள்:

சாதரணமாக தெரிவில் செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன மை வாங்குகிறார்கள் என்பது சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் அழகிகள் என்ன மாதிரியான மைப்பூச்சுக்களை பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்திருக்கும்

அப்படிப்பட்ட 5 அழகிகள் பூசும் மைப்பூச்சைப் பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்

பர்கண்டி லிட்ஸ்:

கண்ணுக்கு மேற்புறத்தில் பூசப்படும் இந்த மைப்பூச்சு சிவப்பு கலந்து நீல நிறத்திலோ அல்லது கருமை கலந்து நீல நிறத்திலோ இருக்கும் மைப்பூச்சாகும். இவ்வகையான மைப்பூச்சு பர்கண்டி லிட்ஸ் என அழைக்கப்படுகிறது.

ட்ரெண்ட்:

பர்கண்டி லிட்ஸ் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்கள் இதை தற்போது பயன்படுத்துகிறார்கள். இந்த லிட்ஸ் முகத்திற்கு கவர்ச்சியை அளிக்கிறது.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்:

பர்கண்டி லிட்ஸை எல்லா வகையான தோலுக்கும் ஏற்ற மைப்பூச்சாக இருக்கும். முக்கியமாக கருப்பாக/ ஃப்ரௌன் நிற தோல்களைக் கொண்டவர்களுக்கு இது சிறப்பான பலன்களை அளிக்கும்.

பயன்படுத்தும் பிரபலங்கள்:
கேத்ரீனா கைஃப்
ஈஸா குப்தா
தமன்னா பாட்டியா
தீபிகா படுகோனா
எம்மி ரோஸம்

கேத்ரீனா கைஃப்:

கேத்ரீனா கைஃப்பின் அழகிற்கு மயங்காத இந்திய ஆண்களே இருக்க முடியாது. அவரது கண்ணுக்கு கீழ் பகுதிலும் மேல் பகுதியிலும் அவர் பூசியிருக்கிற பர்கண்டி மைப் பூச்சு அவரது அழகை மேலுமொரு கவர்ச்சிக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு மஸ்காரவையும் சரியாகப் பயன்படுத்தி அற்புதமாக தோற்றமளிக்கிறார்.

ஈஸா குப்தா

நடிகை ஈஸா குப்தா எப்போதும் புதுவகையான மேக்கப் உக்திகளை கையால்வதில் ஒரு போதும் சளைத்துக் கொண்டதும் இல்லை. பின்வாங்கியதும் இல்லை. இவருடைய கண்ணில் அணிந்துள்ள பர்கண்டி லிட்ஸ் மிகவும் அழகான தோற்றப் பொலிவை அவருக்கு அளித்திருக்கிறது. சிறகு போன்ற அளவில் அவர் ஐ லைனரைப் பயன்படுத்தியிருப்பது மேலும் அவரது முகப்பொலிவை அழகாக்கியிருக்கிறது.

தமன்னா:

தமிழ் படங்களில் மிகவும் நமக்கு பரிட்சையமானவர். முகத்தை மின்னுமளவுக்கு எப்போது வைத்துக் கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த மைப்பூச்சை விரும்பி அணிந்து கொண்டார்.

தீபிகோ படுகோனே

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு தலைசிறந்த நடிகை. அவருடைய வியத்தகு உருவத்தைக் கண்டு அவர் மீது காதல் கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆழமாக பூசப்பட்ட பர்கண்டி லிட்ஸ் மைப்பூச்சு அவரது கண்ணத்தைச் சுற்றி பழுப்பு நிறத்தைக் கொடுத்திருக்கிறது. கண்ணின் மேற்பகுதியில் மிகவும் இறுக்கமாக பர்கண்டி லிட்ஸை பயன்படுத்தியிருக்கிறார். அதே சமயத்தில் கண்ணின் கீழ் பகுதியில் தடிமனாக இந்த மைப்பூச்சை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எம்மி ரோஸம் :

இவரும் இந்த லிட்ஸை பயன்படுத்தி தனது அழகுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டடுக்கு மஸ்கராவைப் பயன்படுத்தி தன்னுடைய கண்ணை பிரகாசமாக அனைவருக்கும் தெரியும் வண்ணத்தில் வைத்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*