இனிப்பு பூந்தியுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்

தீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கடலை மாவு – 1 கப்

சர்க்கரை – 3/4 கப்,
தண்ணீர் – கால் கப்,
எண்ணெய் – பொரிக்க,
உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி – தேவையான அளவு.
செய்முறை  :முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.