உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்

தேவையானப்பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்,
புதினா – சிறிதளவு,
டைமண்ட் கற்கண்டு – ஒரு டீஸ்பூன்,
நெல்லிக்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.
வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.