உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப் செய்முறை

உடல் பலவீனமானவர்கள் அடிக்கடி மட்டன் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று மட்டன் எலும்பு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆட்டு எலும்பு – 1/2 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 10 கிராம்
[பாட்டி மசாலா] மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – சிறிதளவு
[பாட்டி மசாலா] தனியாத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

 

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆட்டு எலும்பை நன்றாக சுத்தம் ஒன்றும் பாதியாக நசுக்கி வைக்கவும்.

கடாயில் 1/2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுத்தம் செய்த ஆட்டு எலும்புகளை சேர்க்கவும்.

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] தனியாத் தூள், [பாட்டி மசாலா] மஞ்சத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தண்ணீர் 5 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து தேவையான அளவு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவைப்பார்த்து அதற்கேற்றவாறு [பாட்டி மசாலா] மிளகுத்தூள், உப்பு தூள் சேர்த்து கொள்ளலாம்.

சுவைக்க சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்.