ஜிலேபி எப்படிச் செய்வது

என்னென்ன தேவை?

மைதா – 1½ கப்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
தயிர் – 1/2 டீஸ்பூன்,
ஆப்ப சோடா – 1/2 டீஸ்பூன்,
நெய் – சிறிது,
மஞ்சள் கலர் – 1 சிட்டிகை,
சர்க்கரை – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிசுக்குப் பதம் வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். மைதா மாவை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி இட்லிப்பானையில் வேக விட்டு எடுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு, அதில் அரிசி மாவு, ஆப்ப சோடா, மஞ்சள் கலர் சேர்க்கவும்.

தயிரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து மோராக்கி அதையும் மாவுக் கலவையில் ஊற்றி பஜ்ஜி மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைக்கவும். ஜிலேபி துணியில் கொஞ்சமாக மாவை ஊற்றி எண்ணெயில் கடகடவென சுற்றவும். இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து அப்படியே ஜீராவில் முக்கியெடுத்து உடனே எடுத்து டிரேயில் அடுக்கி சூடாக பரிமாறவும்.

குறிப்பு : இதை சுடச் சுட சாப்பிட சுவையாக இருக்கும். வெனிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.