வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்து சுவைக்கலாம்

தேவையானப்பொருட்கள்:

வாழைப்பழம் – 10,
நாட்டு சர்க்கரை – 100 கிராம்,
கொட்டை நீக்கிய பேரீச்சை – 50 கிராம்,
திராட்சை – 25 கிராம்,
நெய் – 50 கிராம்.


செய்முறை:
வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். பேரீச்சையையும் சிறிய துண்டுகளாக்கவும். இவற்றுடன் உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்துப் பிசைந்து, சாப்பிடக் கொடுக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு கல்கண்டு சேர்க்கலாம்).
இதில் சத்துக்கள் ஏராளம்!