வேப்பம் பூவை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள் அதிக நன்மை கிடைக்கும்

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்,
உலர்ந்த வேப்பம்பூ – கால் கப்,தேங்காய்ப்பால் – ஒரு கப்,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து… ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால், உப்பு, வேப்பம்பூ சேர்த்து வேகவிட வும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். இது உடல் நலத்துக்கு பெரிதும் உதவும்.

குறிப்பு:

வேப்பம்பூ, தேங்காய்ப்பால் இரண்டையும் தொடர்ந்து சாப்பிட்டால்… வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பூச்சிகள் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். தற்போது வேப்பம்பூ சீஸன் என்பதால், அதை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.